Monday, December 14, 2009

நட்பு


நட்பு என்பது வெறும் மூன்றெழுத்துச் சொல்லல்ல..........

அது மூச்சு உள்ளவரை மனதில் முடிச்சுப்

போட்டு வைக்க வேண்டிய பொக்கிஷம்..............

தொலைந்துவிட்டால் தேடுவது கடினம்.............

தொலைக்காவிட்டால் பிரிவது கடினம்................

ஆகவே, அதைப் பத்திரமாக...................

மனது எனும் மக்கள் வங்கியில்..........

மடித்து வை...................

எத்தனை வருடங்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்...............

ஆனால்............................கடந்த கால வட்டிகளோடு..........................

Sunday, December 13, 2009

நீ


அன்புக்கு இலக்கணம் நீ..........................

அறிவுக்கு ஆரம்பம் நீ...........................

அமைதிக்கு அஸ்திவாரம் நீ...................

அகிலத்துக்கு அடித்தளமும் நீ........................


இன்பத்தின் இன்னிசை நீ..........................

துன்பத்தின் துடைப்பமும் நீ....................

இரவுகளில் தாலாட்டு நீ.........................

இதயத்தின் உயிர் நாடியும் நீ..............


நம்பிக்கையின் நல் வடிவம் நீ......................

நாளையின் நந்தவனமும் நீ.....................

நட்சத்திர நாதம் நீ.....................

என் நாடித்துடிப்பின் இசை கூட....................

நீதானே அம்மா............................
Depacco.com
free counters