Wednesday, May 25, 2011

வலி


கனவுகள் காண்பதற்கு
என்
கண்களை கடன் வாங்கினாய்......
கடைசியில்
காயங்களை மட்டும்
கண்ணீராக
கலந்து விட்டாய்!

என்
இதயத்தை இரவல் வாங்கி
இருட்டறை
யாக மாற்றி விட்டாய்.....
இரவு
பகல் தேடியும்
இமைகள்
இன்னும் மூடாமல்!

உன்
வார்த்தையை நம்பி
என்
வாழ்க்கையை வரைந்து விட்டேன் .....
ஆனால்
, வண்ணங்கள் மட்டும்
எண்ணங்களில்
இல்லை!

காற்றாக
உன்னையே சுவாசிக்கிறேன்
கவிதையாக
உன்னையே எழுதுகிறேன்
என்
கண்ணீரை உனக்கே பரிசளிக்கிறேன்
கடைசி
வரை உனக்காகவே உயிர் வாழ்வேன்......

என்
வாழ்வை வளமாக்க ....
வானவிலாக
நீ வர வேண்டும்!
வருவாயா
?

Monday, May 16, 2011

எச்சரிக்கை!


காதலை கையில் ஏந்தும் முன்....... கண்ணீரைக் கப்பமாக வாங்கி விடுங்கள்..... அப்போதுதான் கவலையை கடிவாளமிட்டு வைக்கலாம் ....

Monday, May 2, 2011

விதி

மழைக்காலங்கள் என் மனக்கோலங்களை வரையும் வேலை .............
மலர்ச்சோலைகள்
என் மனதோடு ........ உரையாடும் வேலை ..............
நான்
மட்டும் மௌனமாக...............

நிமிடங்கள்
எல்லாம் நிற்காமல் ஓட ......... என் நிம்மதி மட்டும் நிறம் மாறுகிறதே...................... மலர்கள் வாடி மண்ணாவது போல .......... என் மனமும் வரையாத ஓவியமாகிறதே................. வார்த்தைகளும் வண்ணம் இழக்க............... என் வாழ்க்கையும்......... எண்ணங்களோடு மட்டும்....... மலராத
மல்லிகையாக.......மறைந்து விடுமோ?
மணிக்கணக்கில் யோசிக்கிறேன்..........ஆனால்........... விடை மட்டும் விதியின் கையில்................!!!!!
Depacco.com
free counters