Sunday, February 24, 2013

இந்த மண்ணில் ........

உன்னைத் தேடும் 
என் விழிகளை வேண்டுமானால் 
ஏமாற்றி விடலாம்.....
ஆனால் 
உன்னில் நான் தொலைத்து விட்ட 
என் இதயத்தை 
எப்படி நான் ஏமாற்றுவது?
உன்னில் நானும்
என்னில் நீயும்
என்று இந்த மண்ணில்
எண்ணி வாழ்வதே
என் விதி என்று இருந்தால்...
என் கண்ணில் உன்னை வைத்து
கன்னியாகவே வாழ்ந்திடுவேன்.....
நான் கண் மூடும் வரை..... 

மாய வலை ....

தித்திக்கும் உன் நினைவுகளை 
சந்திக்கும் போதுதான் 
காத்திருக்கும் வலிகள் கூட 
காணாமல் போய் விடுகின்றது.......
என் கனவுகள் நீயாக இருக்கும் வரை 
என் கவிதைகள் உன் பெயர் சொல்லும் 
இது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை ....

இதயம்.....

உன் வருடும் பார்வைகளால்........
திருடப்பட்ட என் இதயம்.....
தித்திக்கும் உன் நினைவுகளை மட்டுமே
இப்போது சிந்திக்கின்றது......
Depacco.com
free counters