Sunday, December 11, 2011
Monday, December 5, 2011
மாற்றம்
அர்த்தமில்லாமல் பிரிந்து செல்வது
ஆண்களுக்கு அழகாக இருக்கலாம்..........
ஆனால், அர்த்தமே நீதான் என்றிருக்கும்
பெண்களுக்கு இது அமாவாசைதான்.....
ஒவ்வொரு வினாடியும் வினாக்களைக் கேட்டால்.....
விடை சொல்ல வினாடிகளை எங்கே தேடுவது?
விசித்திரமான உன் கொள்கைக்கு
வித்தியாசம் காண என்னால் முடியாது......
வெளி உலகிற்கு நீ ஒரு வெள்ளிக் கிண்ணமாக இருக்கலாம்.....
ஆனால், காதலை கனங்களில் மாற்றிக்கொள்ள
நான் ஒரு வெள்ளைக்காரப் பெண்ணல்ல............ 
Friday, October 14, 2011
Monday, September 19, 2011
தனியே ........
நான் அழுவது உனக்காக அல்ல ........
நான் சிரிப்பதும் உனக்காக அல்ல..........
எல்லாம் எனக்காக மட்டுமே........என்னை நான் மறக்க வேண்டும்.........
நீ என்னை மறக்க முன்........
என்ன வாழ்க்கை திசை இல்லாமல் ......
திரிந்து கொண்டு இருக்கின்றது ........
எனக்கு மட்டும் ஏன் இந்த விதி.....
என் வாழ்வின் பாதை எனக்கே புரியவில்லை........
Wednesday, May 25, 2011
வலி

கனவுகள் காண்பதற்கு
என் கண்களை கடன் வாங்கினாய்......
கடைசியில் காயங்களை மட்டும்
கண்ணீராக கலந்து விட்டாய்!
என் இதயத்தை இரவல் வாங்கி
இருட்டறையாக மாற்றி விட்டாய்.....
இரவு பகல் தேடியும்
இமைகள் இன்னும் மூடாமல்!
உன் வார்த்தையை நம்பி
என் வாழ்க்கையை வரைந்து விட்டேன் .....
ஆனால், வண்ணங்கள் மட்டும்
எண்ணங்களில் இல்லை!
காற்றாக உன்னையே சுவாசிக்கிறேன்
கவிதையாக உன்னையே எழுதுகிறேன்
என் கண்ணீரை உனக்கே பரிசளிக்கிறேன்
கடைசி வரை உனக்காகவே உயிர் வாழ்வேன்......
என் வாழ்வை வளமாக்க ....
வானவிலாக நீ வர வேண்டும்!
வருவாயா?
Monday, May 16, 2011
எச்சரிக்கை!
Monday, May 2, 2011
விதி
மழைக்காலங்கள் என் மனக்கோலங்களை வரையும் வேலை ............. மலர்ச்சோலைகள் என் மனதோடு ........ உரையாடும் வேலை ..............
நான் மட்டும் மௌனமாக...............
நிமிடங்கள் எல்லாம் நிற்காமல் ஓட ......... என் நிம்மதி மட்டும் நிறம் மாறுகிறதே...................... மலர்கள் வாடி மண்ணாவது போல .......... என் மனமும் வரையாத ஓவியமாகிறதே.............
.... வார்த்தைகளும் வண்ணம் இழக்க............... என் வாழ்க்கையும்......... எண்ணங்களோடு மட்டும்....... மலராதமல்லிகையாக.......மறைந்து விடுமோ?
மணிக்கணக்கில் யோசிக்கிறேன்..........ஆனால்........... விடை மட்டும் விதியின் கையில்................!!!!!
Thursday, March 3, 2011
நீ என் வாழ்க்கை!

நீ இல்லாத ஒரு வாழ்வு .......
நீரில்லாமல் வாழும் ஒரு மீனின் போராட்டம்.......
என் வாழ்வின் சுவாசம் நீ........
என் கண்களில் கண்மணி நீ.........
என் வார்த்தையில் வசந்தம் நீ................
என் பார்வையில் ஒளி நீ ...........
என் பாதையில் வழி நீ .............
என் எழுத்துக்களில் எல்லாமே நீ .............
என் கனவுகளில் வண்ணம் நீ ...........
என் நினைவுகளில் நித்தமும் நீ ...............
என் மௌனத்தில் வார்த்தை நீ ..............
என் காலையில் சூரியன் நீ ................
என் மாலையில் நித்திரை நீ ................
என் புன்னகையில் புதிராக நீ .............
என் சுவாசத்தில் சுவடுகள் நீ ...
என் இதயத்தில் இறக்கும் வரை நீ ........... நீயேதான் ............
என் இறுதி மூச்சு கூட நீ ................ ஆனால் ..............
என்றும் உனக்காகவே உயிர் வாழும் ...........ஓர் உருகிய மெழுகுவர்த்தியாக நான்..................
காத்திருக்கிறேன் .........
Subscribe to:
Comments (Atom)





