
நீ இல்லாத ஒரு வாழ்வு .......
நீரில்லாமல் வாழும் ஒரு மீனின் போராட்டம்.......
என் வாழ்வின் சுவாசம் நீ........
என் கண்களில் கண்மணி நீ.........
என் வார்த்தையில் வசந்தம் நீ................
என் பார்வையில் ஒளி நீ ...........
என் பாதையில் வழி நீ .............
என் எழுத்துக்களில் எல்லாமே நீ .............
என் கனவுகளில் வண்ணம் நீ ...........
என் நினைவுகளில் நித்தமும் நீ ...............
என் மௌனத்தில் வார்த்தை நீ ..............
என் காலையில் சூரியன் நீ ................
என் மாலையில் நித்திரை நீ ................
என் புன்னகையில் புதிராக நீ .............
என் சுவாசத்தில் சுவடுகள் நீ ...
என் இதயத்தில் இறக்கும் வரை நீ ........... நீயேதான் ............
என் இறுதி மூச்சு கூட நீ ................ ஆனால் ..............
என்றும் உனக்காகவே உயிர் வாழும் ...........ஓர் உருகிய மெழுகுவர்த்தியாக நான்..................

நீ - நான் = காதல்.
ReplyDeleteஉருகிய காதல் ஒன்றில்
உருவம் பெற்றிருக்கிறது உங்கள் கவிதை..
well done
::shan::.
Fantastic......!!!!!
ReplyDeleteNice
ReplyDeleteThanks for all your comments!
ReplyDeletekeep it up!
ReplyDelete