Tuesday, October 30, 2012

உன்னில் நான்

பல ரோஜாக்களை காட்டி
என் மனதை வருடிய நீ
இன்று என் வாழ்வையும்
ரோஜாக்களைப் போல்
வாசம் வீச வைத்து விட்டாய்....
உன்னில் நான் என்
உயிரைப் பார்க்கிறேன்....
உன்னை நான்
என் உயிராய் நேசிக்கிறேன்...
உனக்குள் தான் நான்
உருகியும் போகிறேன்.....
உன் மீது நான் கொண்ட காதல்
என் உயிரிலும் மேலானது!
என் கடைசி நிமிடங்களில்  கூட
உன் தோல் மீதே
தலை சாய்வேன்!

Wednesday, October 24, 2012

இவள்


இரவின் மடியில் 
உறங்கும் நிலவு போல 
உன் நினைவுகளின் மத்தியில் 
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் 
இவள் 
எப்பொழுதும் 
பிரிவையும் நேசிப்பவள் தான் 

Tuesday, October 23, 2012

கருப்பு

இரவுக்கும் உன் இதயத்திற்கும் 
நிறம் ஒன்று  என்பதை 
நீ சொன்ன வார்த்தையில் அறிந்து கொண்டேன் 
என்ன என்று கேட்கிறாயா?
அதுதான் 
இதுவரை இருந்த நம் காதலை 
இன்றுடன் மறந்து விடுவோம்....
இதை சொல்ல உனக்கென்றால் 
ஒரு நிமிடம் தேவைப்பட்டிருக்கலாம் 
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள எனக்கு 
ஓராயிரம் ஜென்மங்கள் போதாது 
என்பதை நீ அறிவாயா? 

Monday, October 22, 2012

ஆயுள்


உருண்டோடும் காலங்களும் 
வந்து செல்லும் பாதைகளும் 
எல்லைகளே இல்லாமல் இருப்பது போல 
அழகிய உன் நினைவுகளுக்கும் 
என்னில் அழியாத உன் வார்த்தைகளுக்கும் 
எப்பொழுதும் ஆயுள் அதிகம். ........

Saturday, October 20, 2012

காலை வணக்கம்

கலங்காத நினைவுகளை 
கவிதையில் கரைத்து விடும் போது 
கண்களில் வரும் 
கண்ணீர் துளிகள் போல 
பூக்களில் படர்ந்திருக்கும் 
பனித்துளிகள் 
இன்றைய நாளின் 
இனிய நினைவுகளை சொல்ல 
இதயம் மெல்ல திறக்கின்றது 
சூரியனின் உதயம் போல....
அழகிய காலை வணக்கம்...

Tuesday, October 16, 2012

என் இதயம்


பச்சை நிற  ரோஜாக்கள் 
பார்ப்பதற்கு அரிது என்ற போதும் 
பறிப்பதற்கு ஆசைதான்....
அது போல் 
பாசமுள்ள உனது வருகை 
வாரத்தில் ஒரு நாள் என்றாலும் 
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் 
வாழவே ஆசைப்படுகிறது 
என் இதயம்.... 
Depacco.com
free counters