Wednesday, March 28, 2012

சில வார்த்தை .......

கசப்பான உண்மைகளுக்கு
கண்கள் சொல்லும் பதில்தான்
கனமான இந்த கண்ணீர்த்துளிகள் .........
ஊமைகளின் வார்த்தைக்கும்
உண்மையான பாசத்திற்கும்
உலகம் சொல்லும் மொழி தான் மௌனம்!
மௌனங்கள் எப்பொழுதும்
எண்ணங்களின் வண்ணங்களே......

Sunday, March 25, 2012

ஆசை

நேரம் நிற்பதும் இல்லை
தூரம் குறைவதும் இல்லை.....
பாரமான இவ்வுலகில்
பறந்து செல்லும் பறவைகளில்
பாதியாவது நான் இருக்க வேண்டும்
நிறமே இல்லாத நீரினில்
நீந்தித் திரியும் மீன்களில்
ஒரு நிமிடமாவது  எனக்கு வேண்டும்
கரைத்து விட முடியாத
கவிதைகளை சுமந்து வரும் காற்றினில்
கதை பேசும் கணங்கள் வேண்டும்....
கடைசி வாழ்க்கையை
கல்லறையில் கடந்து கொண்டிருக்கும்
கருணையுள்ள உள்ளங்களின்
மௌனம் வேண்டும்......
அனைத்தையும் விட
அழகான அந்தி மழையில்
அரை நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும்....
ஆயுள் முடியும் வரை கூட.....
என் ஆசைகளின் ஒரு வரி தான்
இந்த வார்த்தைகளே இல்லாத கவிதை....
ஆனால், என் மொத்த ஆசைகளையும்
அடக்கி விட எழுத்துக்களும் இல்லை
எழுதுகோலும் இல்லை....

Tuesday, March 20, 2012

தாயின் அன்புக்கும்
தந்தையின் ஆதரவுக்கும்
மத்தியில் வாழும் போது
மறைந்து  போவது மனதின்
காயங்கள் மட்டுமல்ல.......
மண்ணில் நாம் செய்த பாவங்களும் தான்.....
மணித்தியாலங்கள் நிற்காமல் சென்றாலும்
மறந்து விட முடியாத ஜீவன்கள் தான்
அவர்கள்.....

Wednesday, March 14, 2012

பிறந்த நாள்

உன் பெயரோடு
என் பெயரை இணைக்கும்
அந்த இனிய நாள்  தான்
என் இதயத்தின் பிறந்த நாள்.....

Tuesday, March 13, 2012

இன்று என் ......... இதயம்

இமைகள் தேடும் இறுதிப் பயணம்
இன்று என் இதயத்தின் இரண்டு வினாடித் துடிப்பில்
இருபது கோடி நினைவுகளுடன்
நின்று விடப்போகிறது.....
உன் நிஜமான அன்பின்
அழகான மௌனத்தில்........
ஆயுள் வரை வாழ ஆசைதான்....
ஆனால்,
விதியின் கைகளில்
விலங்கிடப்பட்டிருக்கும்
என் வாழ்க்கை என்றுமே ஒரு
வறண்ட பாலைவனம் தான்.....

Monday, March 12, 2012

வாழ்வின் வலி

அறியாத ஒருவனிடம்
அழகான என் வாழ்க்கையை
புரியாமலே ஒப்படைப்பதை விட....
அனைத்தும் அறிந்த உன்னிடம்
கண்களை மூடிக்கொண்டு
கடைசி வரை வாழ நான் தயார்.....
உன் மீது உள்ள நம்பிக்கை
என் உயிர் மீது கூட எனக்கில்லை.....
தந்தையின் தன் மானத்திட்காகவும்
அன்னையின் அதட்டல்களுக்காகவும்
என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்
அடகு வைக்க என்னால் முடியாது......
நான் காதலித்த நீ மட்டுமே எனக்கு
கணவனாகவும் வர வேண்டும்.....
இல்லையென்றால் என் இதயம் துடிப்பதை நிறுத்தி  விடும்
உன்  பெயரின் இறுதி எழுத்தோடு..........

Monday, March 5, 2012

புன்னகை

என் மௌனத்தை உடைத்து விட
உன் வார்த்தைகளில் இருந்து வந்த
வண்ணங்கள் இன்று
என் வாழ்க்கையில்
வரங்களாக மட்டுமல்ல.....
புன்னகையாகவும் தான் ....

இனிமை

நம் இதயங்கள் சந்தித்த அந்த 
இரு  வினாடியும்
இசைகள் எல்லாம்  தோற்று  விட்டன
அவ்வளவு இனிமையான கணங்கள்
அதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லையடா ........... 

Friday, March 2, 2012

என் வலி

வழியினில்  வந்த நீ என்
வாழ்வினில்  தந்த வலிகள்
இன்று என் விழிகளில் வழிகின்றது .......
கண்ணீர் துளிகளாக.....
இரு விழிப்பார்வையும்
ஒருவனின் வருகைக்காக
வலிகளையும் மறந்து
விழிகளைத் திறந்து 
காத்துக்கொண்டிருக்கின்றது......
ஆனால்
கழிந்து கொண்டிருப்பது நாட்கள் மட்டும்தான்....
அதில் அழிந்து கொண்டிருப்பது என் வாழ்க்கையும் தான்...

Thursday, March 1, 2012

நினைவுகள்

கண்களை மூடினால் வரும்
கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால் வரும்
உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .........
Depacco.com
free counters