அறியாத ஒருவனிடம் அழகான என் வாழ்க்கையை
புரியாமலே ஒப்படைப்பதை விட....
அனைத்தும் அறிந்த உன்னிடம்
கண்களை மூடிக்கொண்டு
கடைசி வரை வாழ நான் தயார்.....
உன் மீது உள்ள நம்பிக்கை
என் உயிர் மீது கூட எனக்கில்லை.....
தந்தையின் தன் மானத்திட்காகவும்
அன்னையின் அதட்டல்களுக்காகவும்
என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்
அடகு வைக்க என்னால் முடியாது......
நான் காதலித்த நீ மட்டுமே எனக்கு
கணவனாகவும் வர வேண்டும்.....
இல்லையென்றால் என் இதயம் துடிப்பதை நிறுத்தி விடும்
உன் பெயரின் இறுதி எழுத்தோடு..........

Nice.....
ReplyDelete