நேரம் நிற்பதும் இல்லை தூரம் குறைவதும் இல்லை.....
பாரமான இவ்வுலகில்
பறந்து செல்லும் பறவைகளில்
பாதியாவது நான் இருக்க வேண்டும்
நிறமே இல்லாத நீரினில்
நீந்தித் திரியும் மீன்களில்
ஒரு நிமிடமாவது எனக்கு வேண்டும்
கரைத்து விட முடியாத
கவிதைகளை சுமந்து வரும் காற்றினில்
கதை பேசும் கணங்கள் வேண்டும்....
கடைசி வாழ்க்கையை
கல்லறையில் கடந்து கொண்டிருக்கும்
கருணையுள்ள உள்ளங்களின்
மௌனம் வேண்டும்......
அனைத்தையும் விட
அழகான அந்தி மழையில்
அரை நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும்....
ஆயுள் முடியும் வரை கூட.....
என் ஆசைகளின் ஒரு வரி தான்
இந்த வார்த்தைகளே இல்லாத கவிதை....
ஆனால், என் மொத்த ஆசைகளையும்
அடக்கி விட எழுத்துக்களும் இல்லை
எழுதுகோலும் இல்லை....

No comments:
Post a Comment