பிரிவையும் நேசிப்பவள்
Poems are my life!
Sunday, February 24, 2013
Sunday, December 30, 2012
அவன் நினைவுகளுடன்
ஒவ்வொரு நாளும் கேட்கும்
அவன் குரலை....
ஒரு நாள் கேட்க
முடியாமல் போனால்......
மறு நாள் விடியும் வரை
சிறு துளி கூட உறங்காது
என் கரு விழிகள்.....
அவன் நினைவுகளுடன்
ஓடும் நிமிடங்கள் ...
தான்....
இவள் நிம்மதியைத் தேடும்
தருணங்கள் ......
உயிர் வாழும் காலமெல்லாம்....
உன் உறவாக நான் இருப்பேன்....
உயிர் பிரியும் நேரத்தில்....
உன் உணர்வோடு கலந்திருப்பேன்.....
Saturday, December 29, 2012
ப்ரியமுடன் நேசிக்கிறாய்....
பிரிந்து சென்றாய்.....
அந்த பிரியும் தருவாயிலும்
நீ என்னை புரிந்து கொண்டதால் தான்,
இன்று வரை என்னைப் ப்ரியமுடன் நேசிக்கிறாய்....
பிரிவிலும் உன் பிரியத்தை நேசிக்கிறேன்...
நீ தூர இருந்தாலும்
உன் அன்பு மட்டும்
இன்னும் ஆழமாகவே இருக்கின்றது...
இன்று உன் பிரிவையும் நேசிக்கிறேன்
அதில் நான் கண்ட உன் பிரியத்தையும் நேசிக்கிறேன்...
என் முகத்தில் புன்னகையைத் தந்த
உனக்காக இந்த உயிர் எப்பொழுதும்
காத்திருக்கும் உனக்காகவே.....
Thursday, December 27, 2012
என் எதிர் காலம்
அவன் வார்த்தைகளில்
என் வாழ்க்கை....
என் வாழ்க்கையில்
அவன்தான் வசந்தம்....
எதிர் வரும் காலங்களை...
எவரும் அறிவதில்லை....
ஆனால், ,
என் எதிர் காலம்
அவன் எதிரில் மட்டும் தான்
என்பதை நான் மட்டுமே அறிவேன்...
உலகத்திற்கு நீ ஒருவனாக
இருக்கலாம்......
ஆனால்,
என் உலகமே நீ தானே....
உருகும் கனங்களில் ...
உருகி விடாமல் இருக்கும்
உன் நினைவுகள்
உலக அதிசயமல்ல....
என் உணர்வுகளின் புது சுகம்...
Tuesday, December 25, 2012
பிரிவிலும்.........
விழித்திருக்கும் என் கண்களில் வரும்
உன் விம்பங்களை நான் நேசிக்கிறேன்....
விழிக்காமல் இருக்கும் என் இரவுகளில்
உன் எண்ணங்களை நான் சுவாசிக்கிறேன்...
நீ வரும் பாதைகள் தூரமாக இருந்தாலும்....
வேகமாகவே செல்கின்றது நேரம்....
மேகங்கள் சேர்ந்து உருவான இருள் போல
சோகங்கள் என்னில் சூழ வைத்தாய்...
உறவுகள் அனைத்திலும் என் உயிரை
உணர வைத்த ஓரே உள்ளம் நீதான்....
உன் வருகைதான் என் வாழ்வை...
வளமாக்கிய வசந்த காலம்.....
இன்று உன் பிரிவை எண்ணி
என் உணர்வை இழப்பதா? இல்லை
உன் வரவை எண்ணி
என் உயிரை வளர்ப்பதா என்று
எனக்குத் தெரியவிலை.....
ஆனால்,
பிரிவிலும் உன்னை நான்
ப்ரியமுடன் நேசிக்கிறேன்.....
அதனால்தான் நான் பிரிவையும் நேசிப்பவளாகிவிட்டேன்...
Monday, December 17, 2012
Sunday, December 16, 2012
அந்த நொடி
என் விழிகளில் பட்ட
வலிகளில் ...
உன் உருவமும் ஒன்று ...
உன்னைப் பார்த்த அந்த நொடியிலிருந்து..
என் விடியலையும் நான்
மறந்து விட்டேன் ......
உன்னுள் சங்கமித்து விட்ட
என் எண்ணங்கள் என்றும்
என்னுள் உன்னையே தேடுகின்றது....
உனக்குள் உறைந்து விட்ட நான்
எனக்குள் உன்னை மறைத்து வைத்தேன்..
ஏன் தெரியுமா?
உன்னை யாரும் அறியாமல் இருக்க அல்ல...
உன்னை நான் மட்டுமே அறிந்திருக்கத் தான் .....
Thursday, December 6, 2012
புன்னகை
கனமான வலிகளுக்கு மத்தியிலும்
என் விழிகள் புன்னகை செய்கின்றது......
ஏனென்றால் ....
என் புன்னகையின் விலை
நீ அல்லவா......
நினைத்தவுடன் நெருங்கி வர
நீ என் அருகில் இல்லை ,,,,,,,,,,
நினைவுகளை மட்டுமே
சுமந்து கொண்டிருக்கும் எனக்கு
என்றும் நீ சுமையாக இருந்ததில்லை.....
கண் இமைகளின் நடுவே உள்ள
உன் உருவம் என்னை
உயிர் வாழ வைக்கின்றது
ஆனால்,
கண்ணீரிலே வாழும் என் ஜீவன்
உன்னையே நேசிக்கின்றது.....
Monday, December 3, 2012
வினா
உன் விழிகளில்
என் விடை தெரியாத வினாக்களுக்கு
விடை காண முயன்றேன்......
ஆனால்,
விரைந்து செல்லும்
வினாடிகளுக்கு மத்தியில் .....
மீண்டும் வினாக்களே விடைகளாக கிடைத்ததில்
விடிந்தும் என் விழிகள்
இன்னும் விழிக்கவில்லை ....
காரணம் ...
காரணம் ...
கனவுகளாவது கதை சொல்லும்
என்ற நம்பிக்கையில்.......
என் கண்கள் இன்னும் காவல் இருக்கிறது
நம் காதலுக்காக ......
Friday, November 23, 2012
Sunday, November 18, 2012
Tuesday, November 13, 2012
புன்னகை
நான் பின்னால் திரும்பிப் பார்த்து
புன்னகை செய்தது உனக்கல்ல...
உனக்குள்ளே இருக்கும் என்
இதயத்திற்கும் அல்ல....
மாறாக ... நீ என்னைத் தாண்டிச்
செல்லும் போது
என்னைத் தொட்டுச் சென்ற
உன் சுவாசக் காற்று தான்...
என் முகத்தில் புன்னகையை தந்தது...
புது வசந்தத்தையும் தந்தது.....
நீ தான் என் சொந்தம் என்றும் சொன்னது...
Friday, November 9, 2012
Subscribe to:
Comments (Atom)



.jpg)










