Sunday, December 30, 2012

அவன் நினைவுகளுடன்

ஒவ்வொரு நாளும் கேட்கும் 
அவன் குரலை....
ஒரு நாள் கேட்க 
முடியாமல் போனால்......
மறு நாள் விடியும் வரை 
சிறு துளி கூட உறங்காது 
என் கரு விழிகள்.....
அவன் நினைவுகளுடன் 
ஓடும் நிமிடங்கள் ...
தான்....
இவள் நிம்மதியைத் தேடும் 
தருணங்கள் ......
உயிர் வாழும் காலமெல்லாம்....
உன் உறவாக நான் இருப்பேன்....
உயிர் பிரியும் நேரத்தில்....
உன் உணர்வோடு கலந்திருப்பேன்.....

Saturday, December 29, 2012

ப்ரியமுடன் நேசிக்கிறாய்....


என்னைப் பிரிய மனமில்லாமல்.....
பிரிந்து சென்றாய்.....
அந்த பிரியும் தருவாயிலும் 
நீ என்னை புரிந்து கொண்டதால் தான், 
இன்று வரை என்னைப் ப்ரியமுடன் நேசிக்கிறாய்....
பிரிவிலும் உன் பிரியத்தை நேசிக்கிறேன்...
நீ தூர இருந்தாலும் 
உன் அன்பு மட்டும் 
இன்னும் ஆழமாகவே இருக்கின்றது...
இன்று உன் பிரிவையும் நேசிக்கிறேன் 
அதில் நான் கண்ட உன் பிரியத்தையும் நேசிக்கிறேன்...
என் முகத்தில் புன்னகையைத் தந்த 
உனக்காக இந்த உயிர் எப்பொழுதும் 
காத்திருக்கும் உனக்காகவே.....

Thursday, December 27, 2012

என் எதிர் காலம்

அவன் வார்த்தைகளில் 
என் வாழ்க்கை....
என் வாழ்க்கையில் 
அவன்தான் வசந்தம்....
எதிர் வரும் காலங்களை...
எவரும் அறிவதில்லை....
ஆனால், ,
என் எதிர் காலம் 
அவன் எதிரில் மட்டும் தான் 
என்பதை நான் மட்டுமே அறிவேன்...
உலகத்திற்கு நீ ஒருவனாக 
இருக்கலாம்......
ஆனால்,
என் உலகமே நீ தானே.... 
உருகும் கனங்களில் ...
உருகி விடாமல் இருக்கும் 
உன் நினைவுகள் 
உலக அதிசயமல்ல....
என் உணர்வுகளின் புது சுகம்...

Tuesday, December 25, 2012

பிரிவிலும்.........

விழித்திருக்கும் என் கண்களில் வரும் 
உன் விம்பங்களை நான் நேசிக்கிறேன்....
விழிக்காமல் இருக்கும் என் இரவுகளில் 
உன் எண்ணங்களை நான் சுவாசிக்கிறேன்...

நீ  வரும் பாதைகள் தூரமாக இருந்தாலும்....
வேகமாகவே செல்கின்றது நேரம்....
மேகங்கள் சேர்ந்து உருவான இருள் போல 
சோகங்கள் என்னில் சூழ வைத்தாய்...

உறவுகள் அனைத்திலும் என் உயிரை 
உணர வைத்த ஓரே உள்ளம் நீதான்....
உன் வருகைதான் என் வாழ்வை...
வளமாக்கிய வசந்த காலம்.....

இன்று உன் பிரிவை எண்ணி 
என் உணர்வை இழப்பதா? இல்லை 
உன் வரவை எண்ணி 
என் உயிரை வளர்ப்பதா என்று 
எனக்குத் தெரியவிலை.....
ஆனால்,
பிரிவிலும் உன்னை நான் 
ப்ரியமுடன் நேசிக்கிறேன்.....
அதனால்தான்  நான் பிரிவையும் நேசிப்பவளாகிவிட்டேன்...

Monday, December 17, 2012

ரோஜா

நீ பார்க்கும் பார்வையில் 
நான் ரோஜாவகிறேன்.....
நீ பேசும் வார்த்தையில் 
நான் பனித்துளியாகிறேன் ....
மேலும் , 
நீ என் அருகில் வரும் போது ...
நான் பனித்துளி படர்ந்த 
ரோஜாவாக மாறிவிடுகிறேன்....
இது நான் சொன்னதல்ல...
நீயாகவே என்னில்  கண்டது......

Sunday, December 16, 2012

அந்த நொடி

என் விழிகளில் பட்ட 
வலிகளில் ...
உன் உருவமும் ஒன்று ...
உன்னைப் பார்த்த அந்த நொடியிலிருந்து..
என் விடியலையும்  நான் 
மறந்து விட்டேன் ......
உன்னுள் சங்கமித்து விட்ட 
என் எண்ணங்கள் என்றும் 
என்னுள் உன்னையே தேடுகின்றது....
உனக்குள் உறைந்து விட்ட நான் 
எனக்குள் உன்னை மறைத்து வைத்தேன்..
ஏன் தெரியுமா?
உன்னை யாரும் அறியாமல் இருக்க அல்ல...
உன்னை நான் மட்டுமே அறிந்திருக்கத்  தான் .....


Thursday, December 6, 2012

புன்னகை

கனமான வலிகளுக்கு  மத்தியிலும் 
என் விழிகள் புன்னகை செய்கின்றது......
ஏனென்றால் ....
என் புன்னகையின் விலை 
நீ அல்லவா......
நினைத்தவுடன்  நெருங்கி   வர 
நீ என் அருகில் இல்லை ,,,,,,,,,,
நினைவுகளை மட்டுமே 
சுமந்து கொண்டிருக்கும் எனக்கு 
என்றும் நீ சுமையாக இருந்ததில்லை.....
கண் இமைகளின் நடுவே உள்ள 
உன் உருவம் என்னை 
உயிர் வாழ வைக்கின்றது 
ஆனால், 
கண்ணீரிலே வாழும் என் ஜீவன் 
உன்னையே நேசிக்கின்றது.....

Monday, December 3, 2012

வினா

உன் விழிகளில் 
என் விடை தெரியாத வினாக்களுக்கு 
விடை காண முயன்றேன்......
ஆனால்,
விரைந்து செல்லும் 
வினாடிகளுக்கு மத்தியில் .....
மீண்டும் வினாக்களே விடைகளாக  கிடைத்ததில் 
விடிந்தும் என் விழிகள் 
இன்னும் விழிக்கவில்லை ....
காரணம் ...
கனவுகளாவது கதை சொல்லும் 
என்ற நம்பிக்கையில்.......
என் கண்கள் இன்னும் காவல் இருக்கிறது
நம்  காதலுக்காக ......

Friday, November 23, 2012

பிடிக்கும்....

நிலவைப் பிடித்த எனக்கு 
உன் நினைவுகளையும் பிடிக்கும்...
மலரைப் பிடித்த எனக்கு...
உன் மனதையும் பிடிக்கும் 
இரவைப் பிடித்த எனக்கு 
உன் இமைகளையும் பிடிக்கும்.....
மழையைப் பிடித்த எனக்கு 
உன் பிழைகளையும் பிடிக்கும்....
ஆனால்,
உன்னைப் பிடித்த எனக்கு 
உலகில் வேறு எதையும் பிடிக்கவில்லை...
உன்னைத் தவிர.... 

Sunday, November 18, 2012

மருதாணி

கைகளில் இட்ட மருதாணி
உன் மனதைப் போலவே 
அழகாகி விட்டது.............
அன்பிலே உருவான நீ.........
என் ஆள்  மனதையும் 
உன் அடிமையாய்  ஆக்கிவிட்டாய்.....
ஆயுள் வரை நான் வேண்டி நிற்கிறேன் 
உன் அளவிட முடியாத அன்பை மட்டும் .............

Tuesday, November 13, 2012

புன்னகை

நான் பின்னால் திரும்பிப் பார்த்து 
புன்னகை செய்தது உனக்கல்ல...
உனக்குள்ளே இருக்கும் என் 
இதயத்திற்கும் அல்ல....
மாறாக ... நீ என்னைத் தாண்டிச் 
செல்லும்  போது 
என்னைத் தொட்டுச் சென்ற 
உன் சுவாசக்  காற்று தான்...
என் முகத்தில் புன்னகையை தந்தது...
புது வசந்தத்தையும் தந்தது.....
நீ தான் என் சொந்தம் என்றும் சொன்னது...

Friday, November 9, 2012

மழலை


மழலைகளின் மொழிகளும் 
மறந்து சென்ற நினைவுகளும் 
எப்பொழுதும்    புரியவே புரியாது ...
மழலை சிரிப்பில் உள்ளம் 
மயங்கி விடும் போது ......
கலங்கி விட்ட நெஞ்சம் கூட 
கொஞ்சம்....மலர்ந்து விடும்....
குழந்தையாகவே இருக்கும் வரம் 
கிடைத்தால் என்ன? 
நாம் வாழ் முழுவதும் 
வசந்தமாகவே இருந்து விடலாம்....

Sunday, November 4, 2012

உனக்கே

உன் இரண்டு நிமிட மௌனத்தில் 
என் இருண்டு போன இதயம் 
மீண்டும் இறந்து போக நினைக்கவில்லை....
மாறாக 
உன்னைப் பிரிந்து வாழ்ந்த 
அந்த நொடிகளில் 
உன்னில் புரிந்து கொள்ள வேண்டிய 
பல விடயங்களை நான் அறிந்தும் கொண்டேன்...
உனக்கே உரிமையான என் வாழ்க்கை 
என்றும் உனக்காகவே உயிர் வாழ்கிறது...
உன்னை மட்டுமே   உயிராக 
நேசிக்கவும் செய்கிறது.....
சுவாசிக்கவும் செய்கிறது....


Tuesday, October 30, 2012

உன்னில் நான்

பல ரோஜாக்களை காட்டி
என் மனதை வருடிய நீ
இன்று என் வாழ்வையும்
ரோஜாக்களைப் போல்
வாசம் வீச வைத்து விட்டாய்....
உன்னில் நான் என்
உயிரைப் பார்க்கிறேன்....
உன்னை நான்
என் உயிராய் நேசிக்கிறேன்...
உனக்குள் தான் நான்
உருகியும் போகிறேன்.....
உன் மீது நான் கொண்ட காதல்
என் உயிரிலும் மேலானது!
என் கடைசி நிமிடங்களில்  கூட
உன் தோல் மீதே
தலை சாய்வேன்!

Wednesday, October 24, 2012

இவள்


இரவின் மடியில் 
உறங்கும் நிலவு போல 
உன் நினைவுகளின் மத்தியில் 
உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் 
இவள் 
எப்பொழுதும் 
பிரிவையும் நேசிப்பவள் தான் 

Tuesday, October 23, 2012

கருப்பு

இரவுக்கும் உன் இதயத்திற்கும் 
நிறம் ஒன்று  என்பதை 
நீ சொன்ன வார்த்தையில் அறிந்து கொண்டேன் 
என்ன என்று கேட்கிறாயா?
அதுதான் 
இதுவரை இருந்த நம் காதலை 
இன்றுடன் மறந்து விடுவோம்....
இதை சொல்ல உனக்கென்றால் 
ஒரு நிமிடம் தேவைப்பட்டிருக்கலாம் 
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள எனக்கு 
ஓராயிரம் ஜென்மங்கள் போதாது 
என்பதை நீ அறிவாயா? 

Monday, October 22, 2012

ஆயுள்


உருண்டோடும் காலங்களும் 
வந்து செல்லும் பாதைகளும் 
எல்லைகளே இல்லாமல் இருப்பது போல 
அழகிய உன் நினைவுகளுக்கும் 
என்னில் அழியாத உன் வார்த்தைகளுக்கும் 
எப்பொழுதும் ஆயுள் அதிகம். ........

Saturday, October 20, 2012

காலை வணக்கம்

கலங்காத நினைவுகளை 
கவிதையில் கரைத்து விடும் போது 
கண்களில் வரும் 
கண்ணீர் துளிகள் போல 
பூக்களில் படர்ந்திருக்கும் 
பனித்துளிகள் 
இன்றைய நாளின் 
இனிய நினைவுகளை சொல்ல 
இதயம் மெல்ல திறக்கின்றது 
சூரியனின் உதயம் போல....
அழகிய காலை வணக்கம்...

Tuesday, October 16, 2012

என் இதயம்


பச்சை நிற  ரோஜாக்கள் 
பார்ப்பதற்கு அரிது என்ற போதும் 
பறிப்பதற்கு ஆசைதான்....
அது போல் 
பாசமுள்ள உனது வருகை 
வாரத்தில் ஒரு நாள் என்றாலும் 
வாழ்நாள் முழுவதும் உன்னுடன் 
வாழவே ஆசைப்படுகிறது 
என் இதயம்.... 

Monday, September 24, 2012

உனக்காகவே...

நீ என்னுடன் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ...
வண்ணங்களால் ஆன வானவில் ஆகிறது ...
வார்த்தைகளில் இனிமையை வைத்திருக்கும் நீ 
என் வாழ்க்கையிலும் இருண்டு விடாத 
நினைவுகளை தந்து கொண்டிருக்கிறாய்...
இத்தனைக்கும் மத்தியில் 
இமைகளை மூடினாலும் 
இதயம் சொல்லிக்கொண்டிருக்கும் 
ஒரே ஒரு பெயர் 
என் உயிரான உன் பெயர் மட்டுமே... 
இந்த உலகில் எந்த ஜீவனும் 
உன் சொந்தம் போல இல்லை..
உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும் 
என் இதயம் என் இமைகளை விட 
உன் வரவைக் எதிர் பார்க்கிறது...
எனக்குள்ளே 
ஆனால், 
உனக்காகவே...

Thursday, September 20, 2012

மறுப்பு

உன் பார்வையில் பட்ட
என் பாதங்கள் கூட
பாதையில் நடக்க மறுக்கின்றது
நீ என் அருகில் இல்லாததால்......


Tuesday, September 11, 2012

ஆனால்

உருகிய கனங்களில்
கரைந்து விட்ட உன் நினைவுகளை
என்றும் தேயாத என் விழிகளில்
மீண்டும் தேடித் பார்க்கிறேன்
ஆனால் ,

உன்னில் நான் இல்லை என்ற போதும்
என்னில் நீ என்றுமே இருக்கிறாய்
கண்ணில் கண்ணீர் என்ற உருவத்தில் மட்டும் .....

Monday, September 3, 2012

உன் வரவை ........

சிறகுகள் இருந்தும் பறக்க முடியாத 
கூண்டுக்க் கிளி போல 
உன் நினைவுகள் இருந்தும் 
அருகில் இருக்க முடியாத 
ஒரு உயிரானேன் நான்.... 
பல உறவுகளுக்கு மத்தியில் 
உள்ளம் தேடும் ஒரே ஒரு உயிர் 
நீ மட்டுமே....
காத்திருப்பு கூட ஒரு அழகான 
கவிதை  என்பதை 
உனக்காக காத்திருக்கும் போதுதான் 
உணர்கிறேன்..... 
உன்னை உயிராக நேசிக்கிறேன்... 
உன் வரவை வானவில் போல 
வரைந்து வைத்திருக்கிறேன் ...

Saturday, August 18, 2012

ஏமாற்றமே.....

பாலைவனத்தில் தண்ணீரை எதிர் பார்ப்பதும்
பறித்த பின் வாழ்வை எதிர் பார்ப்பதும்
பாரினில் உள்ள பூக்களின் ஏமாற்றமே...
அது போல்
பாசத்தில் நேசத்தை எதிர் பார்ப்பதும்
பிரிந்த பின் பிரியங்களை எதிர் பார்ப்பதும்
பாரினில் உள்ள பெண்களின் ஏமாற்றமே...

Monday, August 13, 2012

வலிகள்

விழிகளில் சுமந்து கொண்டிருக்கும்
வலிகள் கூட
மொழிகளில் அடக்கிவிட முடியாத
கண்ணீர் துளிகளின் விம்பங்களே ...

Tuesday, July 24, 2012

மன்னிப்பு

சிந்தி விடும் சொற்களையும் 
வந்து விழும் மழைத்துளிகளையும் 
மீண்டும் திரும்பப் பெறுவது 
சாத்தியமில்லை...
ஆனால், 
அந்த சொற்களால் 
மறக்க  முடியாத காயங்களை 
உங்கள்  மனதில் இறக்கி விட்டேன்..
மணித்தியாலங்கள் பல சென்ற போதும் 
உங்கள் மன்னிப்பை வேண்டி நிற்கிறேன்...
மன்னிப்பீர்களா?

Sunday, July 8, 2012

உன் வருகை

உன் அன்பில் உயிர் வாழ்கிறேன்.....
உன் வார்த்தையில் வண்ணமாகிறேன்...
உன் பார்வையில் என் பாதையை காண்கிறேன்
உன் கோபத்தையும் குறைவில்லாமல் ரசிக்கிறேன்
இன்று உன் பிரிவில் என் வலியை உணர்கிறேன்....
என்று உன் வருகை என என் விழிகளை
வழிகளில் வைத்து காத்திருக்கிறேன்...
காதலுடனும் கற்பனைகளுடனும்.... 

 

Saturday, June 16, 2012

உண்மை

உன் அழகிய நினைவுகளை
சுமந்துகொண்டிருக்கும் என் இதயம் கூட
ஒரு கருவறைதான்........
கண்களில் வந்த உன் கனவுகளும்
காற்றினில் வந்த உன் வார்த்தைகளும்
காலங்களையும் மறந்து
என்னைக் கவிதை எழுத வைத்தது....
விதி செய்த விளையாட்டால் இன்று
விடை காண முடியாமல்
விட்டு வைக்கப்பட்டிருப்பது
என் வாழ்க்கை மட்டுமே......

விதி

கண்ணாடியில் கவிதையாக எழுதப்பட்ட
என் கதைகள் இன்று
கனவுகளில் மட்டும்
கற்பனையாகவும் கண்ணீராகவும்
காலங்களை மறந்து
காற்றாக மாறி விட்டது.......

Tuesday, June 12, 2012

ஆசை

கவவுகளில் மட்டும் வரும் உன் நினைவுகளை 
என் கண்களிலும் காண ஆசைப்படுகிறேன்.....
காற்றினில் கலந்து விட்ட உன் கவிதைகளை 
நான் காலமுள்ளவரை சுவாசிக்க ஆசைப்படுகிறேன்...
காவல் புரியும் உன் கண்களுக்குள் 
கண்மணியாக வசிக்க ஆசைப்படுகிறேன்.....
வானவில் போன்ற  இந்த வாழ்க்கையில் 
கடைசி வரை உன்னுடன் மட்டுமே வாழ ஆசைப்படுகிறேன்...
என் ஆசைகளை நீ அவசியாமாக நினைப்பாயா? 
இல்லாவிட்டால், அலட்சியமாக அழித்துவிடுவாய?
ஆயுள் வரை காத்திருப்பேன் உன் அழகான பதிலுக்காக....

Friday, May 18, 2012

பிரிவில் உன் நினைவுகள்

உன் நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் ...
என் இதயம் 
என்றுமே  அதை ஒரு சுமையாக நினைக்கவில்லை.....
சுகமான அந்த கனங்கள் 
சுருக்கமாகவே கழிந்து விட்டது.....
ஆனாலும் நெருக்கமான உன் நினைவுகளை ....
அழியாத அர்த்தங்களுடன் 
அடிக்கடி என் இமைகளில் காண்கிறேன் ...
கண்ணீர்த்துளிகளாக மட்டுமே.................

Sunday, May 13, 2012


கரைந்து செல்லும் நிமிடங்களிலும் 
உன் நினைவுகளை வரைந்து கொண்டிருக்கிறேன்.....
தூரங்களும் நேரங்களும் எப்பொழுதும் 
நமக்கு எதிரிதான்.....
உயிராக உன்னை நேசிக்கிறேன்....
உயிர் வாழ உன்னையே சுவாசிக்கிறேன்....
உன் வருகைக்காகவே காத்துக்கொண்டிருக்கும் 
இவள் என்றுமே பிரிவையும் நேசிப்பவள் தான் 

Thursday, April 26, 2012

என்றும் உன் நினைவுகள்

உதிரத்தில் கலந்துவிட்ட 
உன்  நினைவுகள் ............
என் உறக்கத்தையும் பறித்துவிட்டது 
உயிரினில் வரைந்துவிட்ட 
உன் உருவத்தை 
என்றும் உதிராமல் வைத்திருப்பேன் 
என் உயிரோடு .........
உலகமே நீதான் என்றிருக்கும் 
எனக்கு உணர்வுகளும் நீதான் ............
என்பதை இப்பொழுதுதான் 
நான் உணர்ந்துகொள்கிறேன் உயிரே ............     


Wednesday, March 28, 2012

சில வார்த்தை .......

கசப்பான உண்மைகளுக்கு
கண்கள் சொல்லும் பதில்தான்
கனமான இந்த கண்ணீர்த்துளிகள் .........
ஊமைகளின் வார்த்தைக்கும்
உண்மையான பாசத்திற்கும்
உலகம் சொல்லும் மொழி தான் மௌனம்!
மௌனங்கள் எப்பொழுதும்
எண்ணங்களின் வண்ணங்களே......

Sunday, March 25, 2012

ஆசை

நேரம் நிற்பதும் இல்லை
தூரம் குறைவதும் இல்லை.....
பாரமான இவ்வுலகில்
பறந்து செல்லும் பறவைகளில்
பாதியாவது நான் இருக்க வேண்டும்
நிறமே இல்லாத நீரினில்
நீந்தித் திரியும் மீன்களில்
ஒரு நிமிடமாவது  எனக்கு வேண்டும்
கரைத்து விட முடியாத
கவிதைகளை சுமந்து வரும் காற்றினில்
கதை பேசும் கணங்கள் வேண்டும்....
கடைசி வாழ்க்கையை
கல்லறையில் கடந்து கொண்டிருக்கும்
கருணையுள்ள உள்ளங்களின்
மௌனம் வேண்டும்......
அனைத்தையும் விட
அழகான அந்தி மழையில்
அரை நிமிடம் அமர்ந்திருக்க வேண்டும்....
ஆயுள் முடியும் வரை கூட.....
என் ஆசைகளின் ஒரு வரி தான்
இந்த வார்த்தைகளே இல்லாத கவிதை....
ஆனால், என் மொத்த ஆசைகளையும்
அடக்கி விட எழுத்துக்களும் இல்லை
எழுதுகோலும் இல்லை....

Tuesday, March 20, 2012

தாயின் அன்புக்கும்
தந்தையின் ஆதரவுக்கும்
மத்தியில் வாழும் போது
மறைந்து  போவது மனதின்
காயங்கள் மட்டுமல்ல.......
மண்ணில் நாம் செய்த பாவங்களும் தான்.....
மணித்தியாலங்கள் நிற்காமல் சென்றாலும்
மறந்து விட முடியாத ஜீவன்கள் தான்
அவர்கள்.....

Wednesday, March 14, 2012

பிறந்த நாள்

உன் பெயரோடு
என் பெயரை இணைக்கும்
அந்த இனிய நாள்  தான்
என் இதயத்தின் பிறந்த நாள்.....

Tuesday, March 13, 2012

இன்று என் ......... இதயம்

இமைகள் தேடும் இறுதிப் பயணம்
இன்று என் இதயத்தின் இரண்டு வினாடித் துடிப்பில்
இருபது கோடி நினைவுகளுடன்
நின்று விடப்போகிறது.....
உன் நிஜமான அன்பின்
அழகான மௌனத்தில்........
ஆயுள் வரை வாழ ஆசைதான்....
ஆனால்,
விதியின் கைகளில்
விலங்கிடப்பட்டிருக்கும்
என் வாழ்க்கை என்றுமே ஒரு
வறண்ட பாலைவனம் தான்.....

Monday, March 12, 2012

வாழ்வின் வலி

அறியாத ஒருவனிடம்
அழகான என் வாழ்க்கையை
புரியாமலே ஒப்படைப்பதை விட....
அனைத்தும் அறிந்த உன்னிடம்
கண்களை மூடிக்கொண்டு
கடைசி வரை வாழ நான் தயார்.....
உன் மீது உள்ள நம்பிக்கை
என் உயிர் மீது கூட எனக்கில்லை.....
தந்தையின் தன் மானத்திட்காகவும்
அன்னையின் அதட்டல்களுக்காகவும்
என் வாழ்க்கையை அறியாத ஒருவனிடம்
அடகு வைக்க என்னால் முடியாது......
நான் காதலித்த நீ மட்டுமே எனக்கு
கணவனாகவும் வர வேண்டும்.....
இல்லையென்றால் என் இதயம் துடிப்பதை நிறுத்தி  விடும்
உன்  பெயரின் இறுதி எழுத்தோடு..........

Monday, March 5, 2012

புன்னகை

என் மௌனத்தை உடைத்து விட
உன் வார்த்தைகளில் இருந்து வந்த
வண்ணங்கள் இன்று
என் வாழ்க்கையில்
வரங்களாக மட்டுமல்ல.....
புன்னகையாகவும் தான் ....

இனிமை

நம் இதயங்கள் சந்தித்த அந்த 
இரு  வினாடியும்
இசைகள் எல்லாம்  தோற்று  விட்டன
அவ்வளவு இனிமையான கணங்கள்
அதை சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லையடா ........... 

Friday, March 2, 2012

என் வலி

வழியினில்  வந்த நீ என்
வாழ்வினில்  தந்த வலிகள்
இன்று என் விழிகளில் வழிகின்றது .......
கண்ணீர் துளிகளாக.....
இரு விழிப்பார்வையும்
ஒருவனின் வருகைக்காக
வலிகளையும் மறந்து
விழிகளைத் திறந்து 
காத்துக்கொண்டிருக்கின்றது......
ஆனால்
கழிந்து கொண்டிருப்பது நாட்கள் மட்டும்தான்....
அதில் அழிந்து கொண்டிருப்பது என் வாழ்க்கையும் தான்...

Thursday, March 1, 2012

நினைவுகள்

கண்களை மூடினால் வரும்
கனவுகளை விட
கண்களை திறந்திருந்தால் வரும்
உன் நினைவுகள் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது .........

Tuesday, February 28, 2012

வாழ்க்கையும் வார்த்தைகளும்

உன் ஒவ்வொரு வார்த்தைகளும்
என் வாழ்க்கையின் அர்த்தங்களாகின
என் வாழ்க்கையின் அர்த்தமே நீயான போது
அதில் உன் வார்த்தைகள் மட்டும்
என் வாழ்க்கையானது ஒரு வரம்தான்....
என் வாழ்க்கையும் உன் வார்த்தைகளில் தான்
வண்ணமாகியது......
இன்று வறண்டும் போகிறது......

Sunday, February 26, 2012

அன்பு

என் அழுகையின் அர்த்தம் கூட
என் அளவு கடந்த அன்பு தான்......
அதுவும் உனக்காக மட்டும்
அழியாது அலைந்து கொண்டிருக்கும்
அற்புதமான அன்பு.....
நீ இல்லாத ஒரு வாழ்வு
எனக்கு வேண்டவே வேண்டாம்......
என் சோகங்களுக்கு
எப்பொழுதும் முற்றுப்புள்ளியே இல்லையடா.....

பதில்

நீ தந்த நினைவுகளுக்கும்
நீ வந்த பாதைகளுக்கும்
நீ சொன்ன வார்த்தைகளுக்கும்
நீ இருந்த நிமிடங்களுக்கும்
நீ தந்த காயங்களுக்கும்
இன்று என் கண்கள் பதில் சொல்கின்றது .....
கண்ணீரில் ...........

காதல்

எல்லோரும் சொல்கிறார்கள்
கண்டதும் காதல்
கண்களில் காதல்
கவிதையில் காதல் என்று
காதலை கண்மூடித்தனமாக
கண்டு சொல்கிறார்கள்......
ஆனால்.....
நிஜமான காதல்
எம் நிழலாக வரும்
நிறுத்திவிட முடியாத
ஒரு நினைவின் காவியம் என்பதை
யாருமே அறிவதில்லை......

Tuesday, February 14, 2012

நீ தான்.... !!!

நான் பார்க்கும் போது ............
நீ தான் என் கண்கள் !!
நான்  பேசும் போது...........
நீ தான் என் மௌனம் !!
நான் உறங்கும் போது .............
நீ தான் என் கனவு !!
நான் விழிக்கும் போது ............
நீ தான் என் விடியல் !!
வான் எழுதும் போது ..........
நீ தான் என் கவிதை !!
நான் இருக்கும் வரை ...........
நீ தான் என் புன்னகை !!
நான் இசைக்கும் போது .............
நீ தான் என் பாடல் !!!
நான் நடக்கும் போது ..........
நீ தான் என் பாதை !!!
நான் நினைக்கும் போது ......
நீ தான் என் மனதில் !!!
நான் உயிர் வாழும் போது ......
நீ தான் என் சுவாசம் !!
நான் இறக்கும் போது .......
நீ தன என் கல்லறை.......!!!
கடைசி வரை நீ தான் எனக்கு எல்லாமே.....!!!

Monday, February 13, 2012

காதலர் தினம்

கண்களால் பேசி
கனவுகளை சுமந்து
காற்றலையில் உரையாடி
கைகளை கோர்த்து
கவிதைகளைக் கடந்து
கற்பனைகளை  வைத்து
காலம் உள்ளவரை காதலுடனும்
கடைசிவரை கல்லறை வரையும்
என்று  உண்மையாக உரைத்துக்கொண்டிருக்கும்
உயிருள்ள ஜீவன்களுக்கு
இனிய காதலர் தின வாழ்த்துகள்.........

Saturday, February 11, 2012

உனக்காக .......

நிலவு தேய்ந்தாலும் இரவு அழகு......
 வளைந்து சென்றாலும் நதிகள் அழகு.....
 தூர இருந்தாலும் வானவில் அழகு.....
 கடலோரம் வீசும் காற்று அழகு.......
 கனவுகள் கலைந்தாலும் நினைவுகள் அழகு...
 கற்பனைகள் தீர்ந்தாலும் காதல் அழகு.....
 காவியங்கள் படைக்கும் கண்ணீர் அழகு.....
 இதயம் வலித்தாலும் இறந்த காலங்கள் அழகு....
 இன்பமூட்டும் இன்னிசைகள் அழகு.....
 இத்தனைக்கும் மத்தியில் இன்று வரை....
 என்னுயிரில் கலந்திருக்கும்
 உன்னுயிர் என்றென்றுமே அழகு....
Depacco.com
free counters